Skip to main content

திருச்சி மணிகண்டம் மார்க்கெட் இடம் வாங்கியதில் முறைகேடா ! வியாபாரிகள் அதிர்ச்சி!

Published on 30/06/2018 | Edited on 30/06/2018

திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே கள்ளிக்குடி என்ற இடத்தில் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது கடந்த 2014-ம் ஆண்டு காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்களுக்கான மத்திய வணிக வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து ரூ.77 கோடி திட்ட மதிப்பீட்டில் மத்திய வணிக வளாகம் கட்டப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆன்லைன் வீடியோவில் திறந்து வைத்தார்.

இதற்கிடையில் இந்த இடம் வியாபாரிகளுக்கு பத்தாது. கடைகள் எல்லாம் சின்ன சின்னதாக இருக்கிறது என்று நீதிமன்றத்திற்கு வழக்கு தொடுத்து சில காலம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. திருச்சி நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள காந்திமார்க்கெட் பகுதி போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் காந்தி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளையும் கள்ளிக்குடி வணிக வளாகத்துக்கு மாற்றம் செய்வது தான் இதன் முக்கிய நோக்கமாகும். ஆனால் வியாபாரிகள் நடத்திய போராட்டம் காரணமாக காந்திமார்க்கெட்டில் உள்ள கடைகளை உடனடியாக கள்ளிக்குடி வணிக வளாகத்திற்கு மாற்றம் செய்ய முடியவில்லை.
 

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக கள்ளிக்குடி மத்திய வணிக வளாகம் இன்று காலை நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.பி.க்கள் குமார், ரத்தினவேல் மற்றும் முசிறி எம்.எல்.ஏ. செல்வராஜ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வியாபாரிகள் சங்க தலைவர் கோவிந்தராஜீலு பங்கேற்கிறார்கள்.
 

கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தில் மொத்தம் 1000 கடைகள் உள்ளன. இதில் முதல் கட்டமாக இன்று சுமார் 300 கடைகள் செயல்பாட்டுக்கு வருகின்றன. கடைகளை நடத்துவதற்கு ஒதுக்கீட்டு ஆணை பெற்ற வியாபாரிகள் கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்திற்கு வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளை திறந்து தராசு மற்றும் தளவாட பொருட்களை எடுத்து வைக்கும் வேலைகளை தொடங்கினார்கள். உருளை கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட சில பொருட்களும் வாகனங்களில் கொண்டு வந்து இறக்கப்பட்டன. இந்த நிலையில் இந்த இடத்தை வாங்கினதே முறைகேடு நடந்திருக்கிறது என்று கள்ளிக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுப்ரமணியன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறேன். என்று அங்கே ஆர்பாட்டம் செய்தார். 
 

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, 

இது சென்னியப்ப முதலியார் என்பது சொந்தமான இடம். 25 ஏக்கர். இந்த இடத்தை அவர் டிரஸ்டாக மாற்றி இந்த இடத்தில் ஏழைகள் பயன்படும் வகையில் பள்ளிக்கூடமோ, மருத்துவமனையோ கட்டி ஏழைகளின் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று எழுதியிருந்தார். ஆனால் அவருடைய இறுதி காலத்தில் சென்னியப்ப முதலியாரின் மகன்கள், கனகசபாதி, சிவக்குமார், குமாரசண்முகம், சிவசண்முகம் ஆகிய நான்கு மகன்களின் பெயர்களுக்கு டிரஸ்டை எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார். ஒரு டிரஸ்டுக்கு சொந்தமான சொத்துகளை ஏழைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று எழுதியிகிறார். ஆனால் சட்டத்திற்கு முரணாக டிரஸ் சொத்தை அப்போது இருந்த கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் இந்த இடத்தை 1 ஏக்கர் 1 கோடியே 25 இலட்சம் என்று பேசி 10 ஏக்கர் நிலத்தை வாங்கியிருக்கிறார். என்பது சட்டவிரோதமானது என்றார். 
 

இது டிராஸ்ட் இடத்தை வாங்க கூடாது என்கிற விதியிருந்தும் சட்டத்தை மீறி அரசாங்கமே வாங்கலாமா! என்று தான் திருச்சி 2 வது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தற்போது அனைவருக்கும் நோட்ஸ் அனுப்பி வழக்கு விசாரணையில் இருக்கிறது. அவர் புதிய மார்கெட் கேட்டிலே நீதிமன்ற ஆணைய கட்டியிருந்ததை கேள்விப்பட்ட காவல்துறையினர் உடனே வந்து அதை கழற்றி கொண்டு சென்றனர். இந்த நிலையில் தான் இன்று அமைச்சர்கள் தலைமையில் திறப்பு விழா நடக்கிற நேரத்தில் முறைகேடாக வாங்கியிருக்கிறார் என்று புகார் எழுந்திருப்பது வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சார்ந்த செய்திகள்