தூத்துக்குடி மாவட்டம், சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வில் தங்கம் கண்டெடுக்கப்பட்டிருப்பது தொல்லியல் ஆய்வாளர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மட்டுமின்றி சிவகளை பகுதியிலும் கடந்த மார்ச் மாதம் முதல் மூன்றாவது கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இதுவரை 20- க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், சிவகளையில் உள்ள பராக்கிரம பாண்டி திரடு என்ற பகுதியில் தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த தங்கத்தில் சிறுசிறு கோடுகள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஆதிச்சநல்லூரில் தங்கம் கிடைத்த இடம் என்பது இறந்தவர்களின் புதைத்த பகுதி எனக் கூறிய தொல்லியல் ஆய்வாளர்கள், சிவகளையில் தங்கம் கிடைத்த பகுதி மக்கள் வாழ்ந்த பகுதி என விளக்கம் அளித்தனர். சிவகளை அகழாய்வில் ஏற்கனவே 80- க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளனர்.
சங்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமானமும், கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.