Published on 24/05/2021 | Edited on 24/05/2021

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், ''2017 ரெகுலேஷன் மாணவர்களுக்கு முதுகலை, இளங்கலை படிப்புக்கு ஜூன் 14 ஆம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. 2013 ரெகுலேஷன்படி படித்த யு.ஜி மாணவர்களுக்கு ஜூன் 14-ல் தேர்வுகள் தொடங்கும். மற்ற மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 21-ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த முறை தேர்வு எழுதாமலும் , கட்டணம் செலுத்தாமலும் உள்ள மாணவர்கள் ஜூன் 3-க்குள் கட்டணம் செலுத்தலாம். மற்ற பல்கலைக் கழகங்களில் ஜூன் 15ல் தொடங்கி ஜூலை 15க்குள் தேர்வுகள் முடிக்கவேண்டும். ஜூலை 30ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட முடிவெடுத்துள்ளோம்'' என்றார்.