Published on 11/02/2020 | Edited on 11/02/2020
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சூலூர் நீதிமன்றம்.
அதிமுக பெயரில் போலி இணையதளத்தை நடத்தியதாக கடந்த ஜனவரி 25- ஆம் தேதி முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமியை போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமின் கோரி கே.சி.பழனிசாமி சூலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று (11/02/2020) விசாரணைக்கு வந்த நிலையில் நிபந்தனையுடன் கூடிய ஜாமினை வழங்கிய நீதிபதி, சூலூர் காவல் நிலையத்தில் காலையும், மாலையும் ஆஜராகி கையெழுத்திட கே.சி. பழனிசாமிக்கு உத்தரவிட்டார்.