Skip to main content

பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி: முன்னாள் எம்.எல்.ஏ., கைது..!

Published on 26/06/2018 | Edited on 26/06/2018


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மன்மலை கிராமத்தில், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், சி.பி.எம் கட்சியை சேர்ந்தவருமான முன்னாள் எம்.எல்.ஏ., டில்லிபாபு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு நின்று கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர், டில்லிபாபுவும் அவரது சார்பு கட்சியனரும் அருகில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த செங்கம் டி.எஸ்.பி சுந்தரமூர்த்தி சாப்பிட்டுக் கொண்டிருந்த டில்லிபாபுவிடம் வந்து கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்ததால் உன்னை கைது செய்கிறோம் என்றார்.

 

 

இதையடுத்து, டில்லிபாபு போலீசாரிடம் கையை கழுவிக் கொண்டு வருகிறேன் எனக்கூறி எழுந்துள்ளார். அப்போது, போலீசார் அவரது தோள்பட்டை மீது அடித்து, சட்டையை கிழித்து கையெல்லாம் கழுவ வேண்டாம், வந்து வண்டியில் ஏறு என தரதரவென இழுத்துச் சென்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சியினரையும், விவசாயிகளையும் அதிர்ச்சியடைய வைத்தது.

அப்போது, நாங்களும் டில்லிபாபுவுடன் கைது ஆகிறோம் என டி.எஸ்.பியுடன் சென்ற விவசாய சங்கத்தினரை பிடித்து தள்ளிவிட்டு டில்லிபாபுவை மட்டும் போலீசார் அழைத்துச் சென்றனர். கைது செய்தவரை எங்கு அழைத்தது சென்றனர் என்பதையும் போலீசார் யாரிடமும் தெரிவிக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து, ஒரு முன்னாள் எம்.எல்.ஏவை இப்படி நடத்துவது சரியல்ல எனக்கூறி கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக செங்கத்திற்கு குவிந்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்