Skip to main content

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

EVKS Ilangovan is infected with corona virus

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அண்மையில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா மறைவை அடுத்து நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

 

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

 

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு இதயத் தமனி நோய் மற்றும் லேசான கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவர் நன்றாக குணமடைந்து வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்