Skip to main content

விஜயகாந்த்தை எல்லோரும் கூப்பிடாமல் கைவிட்டு விட்டால்... இளங்கோவன் பேட்டி

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

 

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

 

அதில், திமுக- காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிவாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் பாமகவும், பாஜவும் சேர்ந்த பிறகு, திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பானது பன்மடங்கு உயர்ந்துள்ளது. பிரசாரத்துக்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி போன்றவர்கள் வர வேண்டும் என்று விரும்புகிறோம். 

 

evks elangovan interview


கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், விரைவில் முடிவு எடுக்க வேண்டும். கடைசியில் அவரை எல்லோரும் கூப்பிடாமல் கைவிட்டு விட்டால் அவர் நிலை அதோகதிதான். இவ்வாறு கூறினார். 

மேலும் அவர், தற்போது நடந்த இந்தியா- பாகிஸ்தான் தாக்குதலை பொறுத்தவரை, இந்திய விமான படையை சார்ந்தவர்கள் மிகவும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். ஒட்டுமொத்த இந்தியாவே அவர்களை புகழ்கிறது. ஆனால், எப்போதும் போல இதிலேயேயும் அரசியல் லாபம் அடைய பாஜ முயற்சிக்கிறது. அது ஒருபோதும் நிறைவேறாது. இந்த வெற்றி என்பது, இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட விமான படை மற்றும் இந்திய ராணுவத்தை மட்டுமே சாருமே தவிர, ஆளுகின்ற அரசுக்கோ, பிரதமராக இருக்கக்கூடிய மோடியையோ போய் சேராது. இவ்வாறு கூறினார். 



 

சார்ந்த செய்திகள்