ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதை கூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே: மு.க.ஸ்டாலின்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (07-09-2017) வெளியிட்டுள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பதிவுகள்:
முகநூல் பதிவு:
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சோமனூரில் பேருந்து நிலையத்தின் கூரை, தகர்ந்து விழுந்தததில் 5 பேர் உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. பலியானவர்களின் குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை பேருந்து நிலைய மேற்கூரைகள் மட்டுமின்றி, அரசு நிர்வாகத்தின் அடித்தளமும் சீர்கெட்டுக் கிடக்கிறது. விரைவில் நிலைமைகள் மாற்றப்படும்.
ட்விட்டர் பதிவு:
நீட்டை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா ராஜினாமா: அவரது உணர்வை மதிப்போம். ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதை கூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே!
Tweet Link:
https://twitter.com/mkstalin/status/905731895048028161