
தெலுங்கானா மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகவும் செயல்பட்டு வருகிறார். இருமாநிலங்களில் ஆளுநராக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தரும் அன்பே தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார்.
சென்னை அருகே உள்ள பூவிருந்தவல்லியில் பாஜக பிரமுகர் இல்லத்திருமண விழா நடைபெற்றது. முன்னால் தமிழக பாஜக தலைவரும் தற்போதைய தெலுங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் விழாவில் கலந்து கொண்டு திருமணத்திற்குத் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர் இரு மாநிலங்களின் ஆளுநராக இருந்து பல்வேறு அலுவல்கள் இருந்தாலும் தமிழக மக்களின் அன்புக்கு இதுபோன்ற விழாக்களில் தொடர்ந்து பங்கேற்பதாகக் கூறினார். தமிழ்நாட்டு மக்களின் அன்பு எனக்கு மேலும் மேலும் உற்சாகம் அளிப்பதாகக் கூறினார். இவ்விழாவில் மத்திய இணை அமைச்சர் மற்றும் பாஜக பிரமுகர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.