Skip to main content

ரகசிய கண்காணிப்பில் பழைய குற்றவாளிகள்...

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

 

எம்.எல்.ஏ., அமைச்சர், உள்ளாட்சி மன்ற தலைவர்கள் என பலர் மீதும் பல குற்ற வழக்குகள் முந்தைய காலங்களில் இருந்த துண்டு. அதிகாரத்திற்கு வந்து விட்ட பிறகு வழக்குகள் நிறைவு பெற்று பலர் மக்கள் தலைவர்களாக உள்ளார்கள். ஒரு சிலர் மீது இப்போதும் வழக்குகள் இருக்கத்தான் செய்கிறது.
 

சரி இவர்களின் கதை ஒரு புறம் இருக்கட்டும்... இப்போது கண்கானிக்கப்படுபவர்கள் க்ரைம் சம்பவங்களில் முன்பு ஈடுபட்டு வந்த பழைய குற்றவாளிகள் தான்.

 

police



ஈரோடு மாவட்டத்தில் தொடர் வழிப்பறி, திருட்டு, அடிதடி, கொலை, கொள்ளை  வழக்குகளில் தொடர்புடையவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று வருகிறார்கள். அதில் தண்டனை காலம் முடிந்தோ அல்லது அவர்கள்  ஜாமினில் வெளியே வந்தவர்களாக இருந்தாலும் அப்படிப்பட்டவர்களை தனிப்பிரிவு மற்றும் கிரைம் போலீசார் மூலம் பட்டியலிட்டு அதற்கென அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார்  கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.  
 

இவர்களது நடவடிக்கைகளை போலீசார் மிகவும் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.    இவர்களில் யாரால் மீண்டும் பிரச்சனை வரும் அல்லது பிரச்சினை வரக்கூடும் என்பது குறித்து உளவு பிரிவு போலீசார் ரகசியமாக விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.
 

 இது சம்பந்தமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறும்போது, "ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இதில் பழைய  குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களை தீவி்ரமாக கண்காணித்து வருகிறோம்.  ஈரோடு மாவட்டத்தில் 920 பழைய குற்றவாளிகள் உள்ளனர்.  அவர்கள் பற்றிய பட்டியல் வைத்துள்ளோம். மேலும் அவர்களது நடவடிக்கையிலும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். 


 

 அவர்கள் பெயர் முகவரி தற்போது அவர்கள்  என்ன செய்து வருகிறார்கள். குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் யார் ? போன்ற விவரங்களை தயார் செய்து அதனை கணினியில் பதிவு செய்து உள்ளோம். இந்த கண்காணிப்பு தொடரும் என்றார். 
 

"இதே போல் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளையும் போலீசார் ரகசியமாக கண்கானித்து அவர்கள் பெறும் லஞ்சத்தை, ஊழலை மக்களிடம் வெளியிட்டால் அது சிறப்பான, தரமான சம்பவமாக இருக்குங்க சார்" என நையாண்டி யாக அதே சமயம் சீரீசாகவும் பேசினார் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ள ஒருவர்.

 

சார்ந்த செய்திகள்