தமிழகத்தின் பிரதான மாட்டுச் சந்தைகளில் ஒன்று ஈரோடு மாட்டுச் சந்தை.
![erode cattle market](http://image.nakkheeran.in/cdn/farfuture/azrmPQ1b2p7Zj8mQx1qNohmqIFtnDlrEf7m0hzgY-zw/1574358743/sites/default/files/inline-images/sdfgdxz.jpg)
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் இரவு மற்றும் வியாழக்கிழமை அன்று மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். புதன் கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகளும் விற்பனை செய்யப்படும். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனை கொண்டு வருவார்கள். இந்த மாடுகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மட்டுமல்லாது வெளி மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா போன்ற மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரில் வந்து வாங்கிச்செல்வார்கள்.
இந்த நிலையில், இன்று ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாட்டுச் சந்தை கூடியது. தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கும் காரைக்குடி, தேனி, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து கால்நடைபராமரிப்பு துறை அதிகாரிகள் வந்து 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மாடுகளை வழங்குவதற்காக வாங்கி சென்றனர். பசு,எருமை,கன்று என ஆயிரக்கனக்கான மாடுகள் விற்பனைக்கு வந்தது. மாடுகளை பல்வேறு மாவட்டம், மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.சந்தைக்கு விற்பனைக்கு வந்த மாடுகள் 90சதவீதம் விற்பனையானது இன்று மட்டும் ரூ.5 கோடிக்கு மாடுகள் விற்பனையானது.