Published on 17/08/2018 | Edited on 17/08/2018

தஞ்சை பெரியக்கோவிலில், கோவில் வளாகத்தில் இருந்த சந்தன மரங்கள் உட்பட 10 மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல்துறையின் பராமரிப்பில் இருந்துவரும் புகழ் பெற்ற தஞ்சை பெரியக்கோவிலின் வளாகத்தில் சந்தனம், பலா, தென்னை உள்ளிட்ட பல மரங்கள் இருந்துவந்தது. இந்நிலையில் அங்குள்ள மூன்று சந்தன மரங்கள் உட்பட 10 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து அங்குள்ள கோவில் அதிகாரிகளிடம் கேட்டதற்கு அதிகாரிகள் யாரும் உரிய பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.