Published on 03/02/2025 | Edited on 03/02/2025
ஈரோட்டில் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர். அதேபோல் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் தீவிர தேர்தல் பரப்புரை நடைபெற்றது. அதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதேநேரம் ஏனைய கட்சிகள் போட்டியிடாததால் முந்தைய இடைத்தேர்தல் போல இல்லாமல் ஈரோடு களையிழந்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்துள்ளது. நாளை மறுநாள் (05/12/2025) வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வரும் பிப்.8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது.