தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விடுபட்டவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்தலுக்கு பிறகு அனைத்து தகுதியுள்ள மகளிருக்கும் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கப்படும்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார். அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.