Published on 21/11/2023 | Edited on 21/11/2023

திருச்சியில் உள்ள நகைக் கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி ஜாபர்ஜா தெருவில் உள்ள 4 நகைக் கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 6 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நகைக் கடைகளில் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நேற்று நகைக் கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில், இன்று திருச்சியில் உள்ள நகைக் கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.