![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/9lydOHBf9uS8FDH1z1TIlXsGlPpDA1CgeDQb3WvF2e0/1693284051/sites/default/files/inline-images/a1262.jpg)
நடிகர் விஷால் சினிமாவை தாண்டி தனது அறக்கட்டளையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அவர் உதவியால் சுமார் 300 பேர் கல்லூரியில் படித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் விஷால் தனது 46வது பிறந்த நாளை ஒட்டி கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்பொழுது, “நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவேன். ஒரு நான்கு பேர் அமர்ந்து கொண்டு விருதாளர்களை தேர்வு செய்வது என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்களும் ரசிகர்களும் அளிக்கும் ஆதரவே மகத்தான விருது. 45 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் மூலம் நடிகர் ரஜினி மக்களை தற்போது வரை மகிழ்வித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த வயதிலும் திரையில் சாதனை படைத்து வருகிறார். அமைச்சர் உதயநிதி செயல்பாடுகள் பற்றி மக்கள் தான் சொல்ல வேண்டுமே தவிர அது பற்றி எனக்கு தெரியாது” என்றார்.