Published on 13/06/2023 | Edited on 13/06/2023
![The Enforcement Directorate raided Senthil Balaji's room at the Chief Secretariat](http://image.nakkheeran.in/cdn/farfuture/P9BqcNcdbBgkCSkpBcPS97lxYuMEGqvQsDbtLUaH2uA/1686648177/sites/default/files/inline-images/we47.jpg)
கடந்த 8 நாட்களுக்கு மேலாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர், உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் நடைபெற்ற நிலையில் தற்பொழுது சென்னையிலும் கரூரிலும் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. கரூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டிலும், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அரசு இல்லத்தில் சோதனையானது நடைபெற்று வருகிறது. அதேபோல் சென்னை ஆர்.ஏ. புரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்தியன் வங்கி அதிகாரிகளும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உதவியாக அவரது அறையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.