Skip to main content

கரூரில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை! 

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

Enforcement department raided 5 places in Karur!

 

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார்.

 

தற்போது மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூரில் சோதனையை மேற்கொண்டுள்ளனர். கரூர் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம் மற்றும் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் நிறுவனம், அம்பாள் நகரில் உள்ள அமைச்சரின் உதவியாளர் சங்கர் வீடு  உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் திமுக ஒன்றியச் செயலாளர் வீடு மற்றும் அலுவலகம், பண்ணை வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதைத் தொடர்ந்து, கரூரில் இந்தச் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனக் கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்