பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் ட்விட்டரை எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்களுக்கு முழுமையாக வாங்கியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் சிஇஒ பராக் அகர்வாலை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார். மேலும் அந்நிறுவனத்தின் சட்டத் துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல், தலைமை நிதி அதிகாரி நெட் சேகல் ஆகியோரையும் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
இந்நிலையில் மதுரை உசிலம்பட்டியில் வானத்தில் திடீரென வரிசையாக அமைந்த ஒளி போன்ற ஒன்று தோன்றியது. இதனை உடனே அப்பகுதி இளைஞர்கள் படம் பிடித்தனர். சிறிது நேரத்தில் அந்த ஒளி மறைந்து விட்டது. இதனை அடுத்து அதைக் குறித்து விசாரிக்கையில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களின் தொகுப்பாக இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதற்கு முன் செப்டெம்பர் 12ல் ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களின் தொகுப்பு உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் வானில் தென்பட்டதும் குறிப்பிடத்தக்கது.