மின்கம்பத்தில் மின் கசிவு - பலியான கறவை மாடு
கோவை பனைமரத்தூரைச் சேர்ந்த தம்பதியர் மனோகரன் - செல்வி. கறவை மாட்டை வைத்து தங்களது வாழ்க்கை பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் இவர்களின் கறவை மாடு இன்று அதிகாலை ஏழு மணியளவில் குளத்தோரத்தில் இருக்கும் புற்களை
தின்ன சென்றது.
அப்போது சாலையோரத்தில் இருக்கும் ட்ரான்ஸ்பார்மர் ஒன்றில் அந்த மாட்டின் உடல் பட்ட போது ஷாக் அடித்து பரிதாபமாய் அங்கேயே உயிரை விட்டது. பள்ளிக்குழந்தைகளும், பாத சாரிகளும் தினமும் போய் வரும் அந்த சாலையில் இப்படி உயிர்களை கொல்லும் அளவுக்கு ஒரு ட்ரான்ஸ்பார்மர் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டனர்.
இது குறித்து பேசும் மனோகரன் – செல்வி தம்பதியினர். நாங்க ஆசை ஆசையா வளர்த்த மாட்டு இது. தினமும் 15 லிட்டர் பால் கறக்கும். இதை வச்சுத்தான் எங்க பொழப்பை ஓட்டிட்டு இருந்தோம். இப்ப அதுவும் போச்சு.
எங்க மாடுங்கறதுக்காக நாங்க சொல்ல வரலை. இந்த வழியா போறவங்க இந்த ட்ரான்ஸ்பார்மர் பக்கம் நின்னு சிறுநீர் கழிப்பதற்காக ஒதுங்குவாங்க. பள்ளிக் குழந்தைகளும் தான். அப்படி இருக்க மின்சார வாரியத்தைச் சேர்ந்தவங்க இப்படி அலட்சியமா இருக்கலாமா..?
இந்த மாட்டுக்கு ஆன மாதிரி எந்தக் குழந்தை மேலாவது பட்டு ஒண்ணுக் கெடக்க ஒண்ணு ஆயிருந்தா என்ன பண்ணுவாங்க இந்த ஈ.பிக்காரங்க.? எல்லாமே உசுருதாங்க...என்கிறார்கள் அவர்கள்.
மாசத்துல ஒரு நாள் கரண்டு கட் பண்ணி மின் பராமரிப்பு பணி செய்யறோம்னு சொல்றாங்க. அந்த லட்சணம் தான் இப்பத் தெரிஞ்சு போச்சே...என கூடியிருந்த பொதுமக்களின் கூட்டமும் கோபமாய் கேள்வியாக்கியது. இதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர் மின்சார வாரிய அதிகாரிகள்.
- அருள்குமார்