Skip to main content

''பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும்'' - மு.க. ஸ்டாலின் ட்வீட்!  

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

'' Efforts to honor the memory of Bharathiyar'' - MK Stalin's tweet!

 

மகாகவி பாரதியாரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தலைவர்கள் தங்களது கருத்துக்களையும், பாரதியாரின் சிறப்புகளையும் தெரிவித்துவருகின்றனர்.

 

'' Efforts to honor the memory of Bharathiyar'' - MK Stalin's tweet!

 

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் ''நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா! திறம்பாட வந்த மறவன்! அறம்பாட வந்த அறிஞன்! படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று! தமிழுக்குத் தொண்டுசெய்த அப்பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும்!'' என தெரிவித்துள்ளார்.

 

இதேபோல் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல். முருகன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ''பாட்டுக்கொரு புலவன் சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினம்!! தனது எழுத்துக்களால் தேசபக்தி தாகத்தை மக்களுக்கு ஏற்படுத்தியவர்.! நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடி.!'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்