Skip to main content

''இந்த வருடமும் பொங்கலுக்கு 1000 ரூபாய்''- எடப்பாடி அறிவிப்பு

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

தமிழகத்தில் புதியதாக மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று கள்ளக்குறிச்சி புதியாக மாவட்டமாக செயல்பாட்டுக்கு வர ஆயத்தமாகி அதற்கான தொடக்க விழா கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.

 

edpadi announce pongal gift

 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி மேடையில் உரையாற்றும்போது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எதையும் பார்க்கவும் மாட்டார் படிக்கவும் மாட்டார் போகிற போக்கில் குற்றச்சாட்டு சொல்லிவிட்டு போய்விடுவார். சேலம் கள்ளக்குறிச்சி எல்லையில் கால்நடை பூங்கா அமைய உள்ளது. திண்டிவனத்தில் உணவு பூங்கா அமைய உள்ளது. தொடர்ந்து மக்கள் நல திட்டங்களை செயல்படுத்திவருகிறது அதிமுக அரசு.

போன வருடம் புயல் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டாலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் நல்ல மழைபொழிந்து செழிப்பாக உள்ளது தமிழகம். எனவே பொங்கலுக்கு ஏதெனும் பரிசு அறிவிப்பு இல்லையா என செல்லும் இடங்களில் மக்கள் கேட்கிறார்கள்.

இந்த மேடையில் சொல்லுகிறேன், போன வருடம் போன்றே இந்த வருடமும் பொங்கலுக்கு ஒரு கிலோ பச்சை அரிசி, முந்திரி, திராட்சை,கரும்பு ஆகிய பொங்கல் தொகுப்புடன் அரிசி ரேஷன் அட்டைக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என கூறினார் என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்