Published on 20/11/2018 | Edited on 20/11/2018

தமிழகத்தை உலுக்கி போட்ட கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது திருச்சி சென்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. கஜா புயலின் தாக்கத்தால் கடலோர மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி சென்றுள்ளார். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை செல்கிறார்.
புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகை ஆகிய இடங்களில் ஏற்பட்ட சேதங்களை முதல்வர் இன்று நேரில் ஆய்வு செய்வார் என்ற தகவல்கள் வந்துள்ளது.