தமிழகத்தில் இதுவரை ராஜாஜி முதற்கொண்டு இறுதியாக ஜெயலலிதா வரை முதல்வராக பலர் இருந்துள்ளனர்.
இவர்களில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உட்பட யாரும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பொங்கல் திருநாளை நேரடியாக தனது உறவுகளோடு கொண்டாடியதில்லை. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த பொங்கல் திருநாளை தனது உறவினர்கள், நண்பர்கள் உட்பட பலரோடு வெகு விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளார். இதற்கு அவர் கூறும் காரணம், ஒரு விவசாயி முதன்முதலாக முதல்வராக இருந்து தமிழர் திருநாளை கொண்டாடுகிறேன் என்பதுதான். இதுபற்றி அதிமுக சேலம் மாவட்ட எம்.எல்.ஏ க்கள் கூறும்போது, தமிழ்நாட்டின் வரலாற்றில் எந்த முதல்வரும் தமிழர் திருநாளை கொண்டாடுவதற்கு வாழ்த்துக்கள் மட்டுமே தெரிவிப்பார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் விவசாயியாக இருந்து இந்த பொங்கல் திருநாளை கொண்டாடுகிறார் என்கிறார்கள்.