Skip to main content

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் எடப்பாடி பழனிசாமி மரியாதை! 

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

Edappadi Palaniswami honors Anna, MGR, Jayalalitha memorials!

 

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று (11/07/2022) காலை 09.15 மணிக்கு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது. 

 

இதில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். கட்சியின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் விரோதமாக செயல்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகிய நான்கு பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியது பொதுக்குழு. கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். 

 

கூட்டத்திற்கு பின் பிரச்சார வாகனம் மூலம் மெரினா வரை சாலை மார்க்கமாக சென்ற கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் அ.தி.மு.க. தொண்டர்கள், மலர்த்தூவியும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார். 

 

அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, பொன்னையன், செங்கோட்டையன், பா.வளர்மதி மற்றும் அ.தி.மு.க.வின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும் தலைவர்களின் நினைவிடங்களுக்கு மரியாதைச் செலுத்தினர். 
 

 

சார்ந்த செய்திகள்