தமிழக மக்களும் திமுகவும் எப்பொழுதும் பாஜகவை எதிர்த்துக் கொண்டேதான் இருப்பார்கள் என உதயநிதி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “கலைஞருடைய நூற்றாண்டு விழாவையொட்டி எங்களுடைய தலைவர், முதலமைச்சர் கொடுத்த அறிவுறுத்தலின்படி முதல் நிகழ்ச்சியாக மயிலாடுதுறையில் கிட்டத்தட்ட 1,000 கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் மற்றும் தையல் இயந்திரம் ஆகியவை கொடுக்க இருக்கிறோம். தொடர்ந்து மாவட்டத்திற்கான ஆய்வுக் கூட்டம் மாலை நடைபெறுகிறது. அதில் கலந்துகொண்டு நாளை காலை நாகப்பட்டினம் செல்ல இருக்கிறேன்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'தொடர்ந்து திமுகவை பாஜக எதிர்ப்பதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு “திமுகவை எப்பொழுதும் பாஜக எதிர்க்கும். பாஜக திமுகவை எதிர்த்தது என்றால் நாம் நல்ல பாதையில் போய்க் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். ஒட்டுமொத்த தமிழகமே பாஜகவை எதிர்க்கத்தான் செய்யும். எந்த காலத்திலும் திமுகவாக இருக்கட்டும், மக்களாக இருக்கட்டும் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எதிர்த்துக் கொண்டே தான் இருப்பார்கள்'' என்றார்
இ.டி ரெய்டு எல்லாம் எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, ''ரொம்ப ஜாலியாக போய்க் கொண்டிருக்கிறது'' என்றார்.