Skip to main content

8 மணல் குவாரிகளில் நடந்த இ.டி ரெய்டு; வாயடைக்க வைக்கும் பறிமுதல் விவரம்

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

ED raid on 8 sand quarries; 14 crore cash seized

 

மணல் குவாரி உரிமையாளர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையில் தங்கம், ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் சென்னை உள்பட புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 34 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தியது. கடந்த மூன்று நாட்களாகத் தொழிலதிபர் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடையவர்களின் இடங்களில் பரபரப்பாகச் சோதனை நடைபெற்றது. தற்போது இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம், ஆவணங்கள் குறித்த தகவலை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது.

 

எட்டு குவாரிகள் தொடர்புடைய இடங்கள் மற்றும் குவாரியை நடத்தி வந்த அதிபர்கள், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்கள், உறவினர்கள் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 12.83 கோடி ரூபாய் வங்கியில் உள்ள பணம் முடக்கப்பட்டுள்ளது. கணக்கில் வராத ரூபாய் 2.33 கோடி ரொக்கமாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 56.86 லட்சம் ரூபாய் எனத் தெரிய வந்துள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்