மனிதாபிமான அடிப்படையில் துணை முதல்வரின் தம்பிக்கு ராணுவ விமான உதவி செய்வது மத்திய அரசின் கடமை என பா.ஜ.க. மாநில செயலாளர் ராகவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து பெரம்பலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக தமிழகத்தில் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்கும். தமிழகத்தில் 67 ஆயிரம் பூத் கமிட்டி அமைக்கப்படவுள்ளது. ஒரு பூத் கமிட்டியில் 4 பேர் என பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகிறது.
இந்திய ராணுவத்தை சேர்ந்த விமானம் இயற்கை இடர்பாடுகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல்தான் மனிதாபிமான அடிப்படையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியை சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு வர இந்திய ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் ஒரு வகையில் மத்திய அரசின் கடமையாகும். இதில் ராணுவ அமைச்சருக்கு பிரத்யேகமான முறையில் அதிகாரம் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.