Published on 13/11/2019 | Edited on 13/11/2019
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்ய செவ்வாய் இரவு வந்தார். அவரை தீட்சிதர்கள் வரவேற்று சாமி தரிசனம் செய்துவைத்தனர்.

இதனைதொடர்ந்து அவர் அங்கு நடைபெற்ற அன்னாபிஷேகத்தை கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தார். கோவிலில் தற்செயலாக இவருடன் பள்ளி பருவத்தில் படித்த பெண் ஒருவர் அறிமுகமாகி பேசினார். சிறிது நேரம் பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.