தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 2-ந் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
அன்றைய தினம் கவர்னர் பன்வாரிலாலின் செயலாளர் ராஜகோபால் பேரவை நிகழ்வுகளில் இருந்தார். இது அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில், இன்றைய கேள்வி நேரம் முடிந்ததும், ராஜகோபாலுக்கு எதிரான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் துரைமுருகன்.
அப்போது அவர், "அவைக்குள் அனுமதியின்றி வேறு யாரும் வரக்கூடாது. ஆளுநரின் செயலர் செய்த காரியத்தால் அவையின் மாண்பு குறைக்கப்பட்டுள்ளது" என சுட்டிக்காட்டிவிட்டு, "சட்டப்பேரவையில் அனைத்து அதிகாரங்களும் படைத்த சபாநாயகருக்கு நிகராக ஆளுநரின் செயலருக்கு இருக்கை அளிக்கப்பட்டது ஏன்" என்றும் கேள்வி எழுப்பினார் துரைமுருகன்.
அப்போது பதிலளித்த சபாநாயகர் தனபால், "எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகளை அரசு எவ்வாறு கையாள வேண்டுமோ அவ்வாறு கையாளும்" என உறுதி அளித்தார் சபாநாயகர் தனபால்.