தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 12-ஆவது மாநாடு மற்றும் கலை இரவு கறம்பக்குடியில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.
பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ரமா ராமநாதன், காசாவயல் கண்ணன், சுரேகா ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டை தொடங்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் வெண்புறா உரையாற்றினார். வேலை அறிக்கை, வரவு-செலவு அறிக்கை, கலை இலக்கிய மற்றும் பண்பாட்டு அறிக்கைகளை முறையே சு.மதியழகன், எம்.ஸ்டாலின் சரவணன், ராசி.பன்னீர்செல்வன், சு.மாதவன் ஆகியோர் முன்வைத்தனர்.
மாநாட்டில் தலைவராக எம்.ஸ்டாலின் சரவணன், செயலாளராக சு.மதியழகன், பொருளாளராக சு.மாதவன், துணைத் தலைவர்களாக ரமா ராமநாதன், ராசி.பன்னீர்செல்வன், துணைச் செயலாளர்களாக கவிபாலா, அரிபாஸ்கர், செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.இளங்கோ, பீர்முகமது, நேசன் மகதி, இந்தியன் கணேசன், மு.கீதா, சாமிகிரீ உள்ளிட்ட 41 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில துணைச் செயலாளர் களப்பிரன் நிறைவுரையாற்றினார். ஆர்.நீலா தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் நா.முத்துநிலவன், ஜீவி ஆகியோர் உரையாற்றினர்.
மாலையில் முகில் கலைக்குழுவின் பறை இசையுடன் தொடங்கிய கலை இரவில் புதுகை பூபாளம் குழுவினரின் அரசியல் நையாண்டி, உல்லத்தட்டி கலைக்குழுவின் நவீன நாடகங்கள், சென்னை மல்லர் கம்பம் குழுவினரின் சாகச நிகழ்ச்சி, அருவி திரைப்படக் கலைஞர்களுக்குப் பாராட்டு கவிஞர் நந்தலாலா, ஜீவி, ஆர்.நீலா ஆகியோரின் உரைவீச்சு, சுகந்தி, சிவானந்தம் உள்ளிட்டோரின் பாடல்கள், சாப்ளின் சுந்தரின் வாய்வித்தை, கவிச்சரம், பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு என விடிய, விடிய ஏராளமான நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. கலையிரவில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்றனர்.