கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வேப்பூரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்ததும், தனியார் வாடகை வாகனத்தின் மூலம் விருத்தாசலத்திற்கு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது விருத்தாசலம் அடுத்த சித்தலூரில் எதிரே லாரி வந்த மீது மோதாமல் இருப்பதற்காக வாகனத்தை ஓட்டுநர் செலுத்தியுள்ளார், கட்டுபாட்டை இழந்து பள்ளி வாகனம் தலைகீழாக கவிழ்ந்தது.
பள்ளிக் குழந்தைகளின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று வாகனத்தில் இருந்த குழந்தைகளை மீட்டனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பின்பு விரைந்து வந்த காவல்துறையினர், அவசர ஊர்தி மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனை வந்த 7 பள்ளி குழந்தைகள் வலியால் துடித்தனர். மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதில் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஜெய்கிருஷ்ணகாந்த், மற்றும் 3 ஆம் வகுப்பு மாணவன் நரேந்திரன் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் அடிப்பட்டதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கொண்டு சென்றனர் இச்சம்பவத்தை கண்டு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி துடித்தனர்.