![Downed power line; Electric train service affected in Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/F_jz-SQ7c4UfSkMdcKhLEURvRH645hpxFufenDPCFaE/1682081718/sites/default/files/inline-images/nm379.jpg)
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து கிடந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக அரக்கோணம் - செங்கல்பட்டு, திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திருமால்பூருக்கு முந்தைய ரயில் நிலையமான பாலூரில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பழைய ரயில்வே பாதையில் இருக்கக்கூடிய ரயில்வே உயர் மின்னழுத்த கம்பி அதிக பளு காரணமாக அறுந்தது தெரிய வந்துள்ளது. எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருந்த நிலையில் உடனடியாக ரயில்வே துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரக்கோணத்தில் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள் மின் வயரை துண்டித்து மின் கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை சரி செய்ய அரை மணிநேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை ஆகும் என்பதால் அது வரை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.