Skip to main content

உடலுறுப்பு தானம் செய்ய விருப்பமா ? உடனே மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்!

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உடலுறுப்பு தானம் செய்ய இணையதளத்தின் மூலம் பதிவு செய்யும் வகையில் இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் அனைவரும் நேர்மையாக உடலுறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை செய்ய இந்த இணையதளம் உறுதி செய்கிறது. இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் மக்கள் எளிதாக உடலுறுப்பு தானம் செய்யலாம் என்பதை உறுதிப்படுத்தவே மத்திய அரசு இத்தகைய இணையதளத்தை தொடங்கியுள்ளது. இதற்கான இணைய தள முகவரி : https://www.notto.gov.in/ இந்த இணையதளத்திற்கு சென்று உடலுறுப்பு தானம் செய்வோர்கள் தனக்கென்று "LOGIN" ID உருவாக்க வேண்டும். பின்பு "USER NAME" மற்றும் "PASSWORD" கிடைக்கும். 

 

organ donation



இதனை உள்ளீடு செய்து Form - 7 - ல் உடலுறுப்பு செய்வோரின் முழு விவரங்களை பதிவிட வேண்டும்  , இதில் Blood Group , Aadhaar Number , புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும் . மேலும் எந்தெந்த உடலுறுப்புகளை தானம் செய்ய விரும்புவீர்களோ அதனை பதிவு செய்து , தன் நெருங்கிய உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களின் பெயர் மற்றும் முகவரி , தொலைப்பேசி பதிவு செய்து சமர்பிக்க வேண்டும்.   ஏனென்றால் உடலுறுப்பு தானம் செய்த நபர் இறந்துவிட்டால் அவரின் நண்பர்கள் மத்திய சுகாதார துறையின் கீழ் இயங்கும் இந்த அமைப்பை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிப்பார். பின் சமந்தப்பட்ட மாவட்ட அரசு மருத்துவர்களை அனுப்பி உடலுறுப்புகளை பெற்று உடலுறுப்பு தேவைப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி விடுவார்கள். 

 

organ donate



மத்திய அரசின் (National Organ & Tissue Transplant Organization ) "NOTTO" மூலம் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் உடலுறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.பின்பு சில நாட்கள் கழித்து உடலுறுப்பு தானம் செய்ய பதிவு செய்தவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் "DONOR PLEDGE" விரைவு தபால் மூலம் வீட்டிற்கு வரும். இதன் மூலம் நாம் இறந்த பிறகும் மற்றவர்கள் மூலம் வாழலாம் என்பது எவராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு இளைஞரும் உடலுறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. அதே போல் உடலுறுப்பு தானம் செய்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து கல்லூரி மாணவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பான மேலும் உதவிக்கு இலவச தொலைபேசி எண் : 1800114770 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


பி . சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்