அ.தி.மு.க.வில் பல்வேறு அதிரடி மாற்றத்திற்கு பிறகு டிடிவி தலைமையில் புதிய கட்சி ஆரம்பித்து ஆர்.கே.நகரில் வெற்றிபெற்று. 18 எம்.எல்.ஏ.க்கள் துணையோடு தமிழகம் முழுவதும் தொடர் பொதுகூட்டம் நடத்திக் தமிழக அரசியலில் பெரிய அதிர்வை ஏற்படுத்தின தினகரன் கடந்த சிலநாட்களாக நீண்ட அமைதியில் இருக்கிறார். அதுவும் செந்தில்பாலாஜி தி.மு.க. செல்கிறார் என்கிற தகவல் தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டுயிருக்கும் நிலையில் டிடிவி தினகரனின் அமைதி அவருடைய கட்சியினருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஆண்டு டிடிவி தினகரன் தனது 54-வது பிறந்தநாளில் அவர், திருப்பதிக்கு சென்று சிறப்பு பூஜை செய்து விட்டு திருவண்ணாமலைக்கு சென்றவர் பின்பு நேராக. ஆர்.கே.நகர் பிரச்சாரத்தின்போது, மக்களோடு மக்களாக பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்.
இந்த நிலையில் இந்த வருடம் நாளை தினகரனின் 55 வது பிறந்தநாள் 13.12.2018 வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள தன் மாவட்ட செயலாளர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு இந்த முறை என்னுடைய பிறந்தநாளுக்கு ஒரு சின்ன விளம்பரம் வாழ்த்து என எதுவுமே கூடாது என மிகவும் கண்டிப்புடன் சொல்கிறேன் என்று உத்தரவு போட்டியிருக்கிறார். காரணம் எதையும் சொல்லாமல் இப்படி பிறந்த நாள் கொண்டாட கூடாது என்று சொல்லியிருப்பது இன்னும் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் திருவண்ணாமலை மூக்குபொடி சாமியாரின் தீடிர் மரணம் அவரை மிகவும் பாதித்துள்ளது என்கிறார்கள். அதே போல் தமிழகத்தில் தினகரன் தலையில் 3 வது அணி அமைந்து விடகூடாது என்று பிஜேபி, அ.தி.மு.க. தி.மு.க. அனைத்து கட்சி தலைமையும் திட்டமிட்டு தினகரன் அணிக்கு பெரிய நெருக்கடி கொடுக்கிறார்கள். இந்த நெருக்கடியில் இருக்கும் கட்சியினருக்கு தன்னுடைய பிறந்தநாளில் ஏதேனும் அறிவிப்பு கொடுப்பார் என்று தொண்டர்கள் நினைத்து கொண்டிருந்த நிலையில் டி.டி.வி.தினகரனின் இந்த அறிவிப்பு பெரிய தொண்டர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செந்தில்பாலாஜியின் தி.மு.க. இணைப்பை தடுக்க இந்த நிமிடம் வரை டிடிவி முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார் என்கிறார்கள் அவருடைய உள்வட்டம் அறிந்தவர்கள்.
டி.டி.வி.தினகரனின் பிறந்தநாள் அதிர்ச்சி பரிசாக செந்தில்பாலாஜி நாளை தி.மு.க.வில் இணைகிறார் என்று தி.மு.க. தொண்டர்கள் சொல்லிவருகிறார்கள்.