Skip to main content

இட்லி மாவு கடையில் புகுந்து திமுக பெண் கவுன்சிலரின் கணவர் மீது தாக்குதல்; திமுக பிரமுகர் மீது புகார்

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

DMK woman councilor  husband assault safter breaking into idly flour shop; Complaint against DMK official

 

குளித்தலை நகராட்சி திமுக பெண் கவுன்சிலரின் கணவரை இட்லி, தோசை மாவு கடைக்குள் புகுந்து மற்றொரு தரப்பைச் சேர்ந்த திமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் 14 ஆவது வார்டு உறுப்பினராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த ராணி. இவருடைய கணவர் முருகேசன். ராணிக்கும் அதே வார்டில் முன்னாள் கவுன்சிலராக இருந்த வினோத் என்ற திமுக பிரமுகருக்கும் இடையே கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இட்லி,தோசை மாவு விற்கும் கடைக்குள் புகுந்த வினோத் மற்றும் அவரது தரப்பினர் ராணியின் கணவர் முருகேசனை தாக்கியுள்ளனர்.

 

இது தொடர்பாக உறுப்பினர் ராணி சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட முருகேசன் முகத்தில் மாவு தெறித்த நிலையில் நிற்க, ‘ஆளுங்கட்சியில் இருக்கும் திமுககாரர்களுக்கே இந்த நிலைமைன்னா நான் இந்த அராஜகத்தை எங்கே கொண்டு போய் சொல்வது எனக்கு தெரியவில்லை' என ராணி புலம்பும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்