திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ஏற்கனவே வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டிருந்த நிலையில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் தற்போது சோதனையில் ஈடுபட்டனர்.
வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பிஇ கல்லூரி, சிபிஎஸ்சி பள்ளியில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு, சோதனை முடிந்த பின் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன்,
வீட்டிற்கு வந்த அதிகாரிகள் முதலில் வருமான வரித்துறையினர் என கூறினர். பின்னர் தேர்தல் பறக்கும் படை என கூறினர். இப்படி மாறி மாறி அதிகாரிகள் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் சோதனையிடக்கூடாது என சட்டம் இருக்கிறது என கூறிய பிறகு விடியற்காலை 3 மணிக்கு ஒரு ஆர்டெரை வாங்கிக்கொண்டு வந்து காண்பித்தனர். அதன்பின் அந்த உத்தரவை பார்த்தபின் எங்களுக்கு எந்த சந்தகேமும் இல்லை சர்ச் செய்துகொள்ளுங்கள் என்று விட்டுவிட்டோம்.
சோதனையிட்டுவிட்டு போயிருக்கிறார்கள். ஆக எங்களிடம் ஒன்றும் இல்லை என தெரிந்திருக்கிறது. போன மாதம் இந்த சோதனை நடந்திருக்கலாம் இப்போது நடக்க என்ன காரணம். வேலூர் நாடாளுமன்ற வேட்பாளராக கதிர் ஆனந்த் நிற்கிறார். அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது அதனால் களத்தில் எங்களை எதிர்கொள்ள முடியதாக மத்திய, மாநில அரசின் துணையில் இருக்கும் சில கலைந்தெடுத்த அரசியல் கழிசடைகள் அதனை தடுத்து நிறுத்த வேண்டும், எங்களுக்கு மனஉளைச்சல் தரவேண்டும் என செய்த சூழ்ச்சி இது. அரசியலில் நாங்கள் கரைகண்டவர்கள் இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம் எனக்கூறினார்.