18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் உரிய சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 290 தொகுதிகள் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 219 இடங்களிலும், மற்றவை 31 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
அதேபோன்று தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி திமுக 35 தொகுதிகளிலும், அதிமுக 3 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இந்த தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனும், என்.டி.ஏ கூட்டணி சார்பாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும், அதிமுக சார்பில் வி.டி.நாராயணசாமியும் போட்டியிட்டனர். இந்த நிலையில தேனி தொகுதியின் முதல் ரவுண்ட் வாக்கு எண்ணிக்கையின் படி, 17,836 வாக்கு பெற்று தங்கத்தமிழ்செல்வன் முன்னிலை வகித்து வருகிறார். டிடிவி தினகரன் 10,268 வாக்குகள் பெற்றுள்ளார். 8,547 வாக்குள் பெற்று அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.