




கடந்த நான்காம் தேதி தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பானது. சிலையை அவமானப்படுத்திய சமூக விரோதிகளை கைது செய்ய பல்வேறு அரசியல் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.
நடந்த இந்த செயலை கண்டித்து சென்னையில் இன்று திமுக மேற்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அதில் பேசிய திமுக நிர்வாகி "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் என்ற திருக்குறளை கூறி அதற்கான விளக்கத்தையும் அளித்தார். இதை படித்தாவது முதலைச்சர் எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இந்த இழுக்கு வள்ளுவருக்கே ஏற்பட்டுவிட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது போல் இன்று திமுக மேற்கு இலக்கிய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது" என்று கூறினார்.
இவர் மேலும் "இது போன்ற அவமதிப்பு மறுபடியும் நிகழ கூடாது என்றும் மறுமுறை நிகழ்ந்தால் தமிழக மக்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள்" என்றார்.