Skip to main content

உன் மகளுக்கு வசதியான மாப்பிளையா தேவைப்படுதா?-3 மகள்களுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பரபரப்பு பின்னணி!

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

போடியில் இரு மகள்களுடன் தாய் தற்கொலை செய்த வழக்கில் நான்கு பேரை போலீசார் திடீரென கைது செய்துள்ளனர்.

போடி காந்தி நகரில் வசித்து வந்த பால்பாண்டி தம்பதிக்கு லட்சுமிக்கு அனுசியா, ஐஸ்வர்யா, அட்சயா என்ற மூன்று  பெண்கள், இவர்கள் சென்னையில் அரிசி வியாபாரம் செய்து வந்தனர். அந்த அரிசி வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில வருங்களுக்கு முன்பு சொந்த ஊரான போடிக்கு வந்தனர். 

இந்தநிலையில்தான் திடீரென பால்பாண்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து லட்சுமி தன் மூன்று பிள்ளைகளையும் காப்பாற்ற தையல் வேலை செய்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் மேலும் தையல் வேலையில் போதுமான வருமானம் கிடைக்காததால் உறவினர்கள் அவ்வப்போது உதவி செய்து வந்தனர். இருந்தாலும் தன் பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை. எப்படி மூன்று பிள்ளைகளையும் காப்பாற்ற போறேனோ என்ற மன வருத்தம் தொடர்ந்து லட்சுமி மனதில் இருந்து வந்தது.

 

theni

 

இந்தநிலையில்தான் கடந்த 3-ம் தேதி அதிகாலையில் டீ வாங்கிட்டு வந்த லட்சுமி அந்த டீயில் விஷத்தை கலந்து மூன்று மூன்று பெண் பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்து விட்டார். இந்த விஷயம் அக்கம்பக்கத்தில் தெரியவே உடனடியாக லட்சுமி, அனுசியா, ஐஸ்வர்யா, அட்சயா ஆகிய நான்கு பேரையும் போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அனுசியா ஐஸ்வர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிந்தது. அதை தொடர்ந்து லட்சுமியையும் மூன்றாவது மகள் அட்சயாவையும் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 8 ஆம் தேதி லட்சுமியின் உடல் நலத்தில் எந்த ஒரு முன்னேற்றம் ஏற்படாததால் திடீரென  இறந்துவிட்டார். இப்படி ஒரே குடும்பத்தில் வறுமையின் காரணமாக தாய் உள்பட இரண்டு மகள்கள் இறந்ததைக் கண்டு போடி பகுதி சோகத்தில் மூழ்கியது. 

இந்தநிலையில் லட்சுமியின் பெரியப்பா மகன் பாண்டியனின் மகன் முத்துசாமியை அனுசியா காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் பாண்டியனுக்கு தெரியவந்தது. இதனால் டென்ஷன் அடைந்த பாண்டியன் அவருடைய மனைவி தனலட்சுமி உறவினர்களான விஜயகுமார், செல்லத்தாய், அம்பிகா ஆகிய 5 பேரும் சேர்ந்து சம்பவம் நடப்பதற்கு முதல்நாள் இரவு வீட்டுக்கு சென்று லட்சுமியை பார்த்து வாய்க்கு வந்தபடி பேசியதுடன் மட்டுமல்லாமல் உன் மகளுக்கு வசதியான மாப்பிளையா தேவைப்படுகிறதா? என்று தரக்குறைவாக பேசி திட்டி உள்ளனர். இதனால் மன முடைந்த லட்சுமி அன்று அதிகாலையில் மகள்களுக்கு டீ வாங்கி வந்து விஷம் கலந்து கொடுத்து தானும் குடித்துவிட்டார்.  இதில் தாய் லட்சுமி மற்றும் அனுசியா ஐஸ்வர்யா ஆகிய 2 மகள்களும் இறந்து விட்டனர்.  இதில் உயிர்தப்பிய தப்பித்த மூன்றாவது  மகள் அக்ஷயா போடி டவுன் போலீசில்  எனது தாய் 2  அக்காக்கள்  தற்கொலைக்கு காரணம் எங்களுடைய உறவினர்கள்தான் என  இன்ஸ்பெக்டர் வெங்கடாசலத்திடம் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் பாண்டியன், தனலட்சுமி, விஜயகுமார், செல்லத்தாய் ஆகிய 4 பேரையும் போலீசார்  கைது செய்தனர்.  இதில்  அம்பிகா மட்டும் தலைவராக தலைமறைவாகிவிட்டதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் போடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்