Skip to main content

திருச்சியில் திமுகவினர் 30,000 பேர் கலந்து கொள்ளும் பிரமாண்ட மாநாடு ஏற்பாடு!

Published on 21/01/2020 | Edited on 21/01/2020

தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக அளவு இடங்களை திமுக கைப்பற்றி உள்ளது. அதிலும் குறிப்பாக திருச்சியில் கே.என்.நேரு தலைமையில் ஒட்டுமொத்தமாக 14 ஒன்றிகளிலும் ஒட்டு மொத்தமாக வெற்றிபெற்றனர்.

வெற்றிபெற்றவர்களில் முக்கியமானவர்களை சென்னைக்கு அழைத்து சென்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கே.என்.நேரு திருச்சியில் வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாநாடு திருச்சியில் நடந்த அனுமதி கொடுங்கள் என்று கோரிக்கை வைக்க, எதற்கு திருச்சிக்கு மட்டும் தமிழகம் முழுவதும் வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளை அழைத்து மாநாடு நடத்திவிடலாம் என்று சொல்ல உடனே இரட்டிப்பு மகிழ்ச்சியில் திருச்சியில் பிரமாண்டமான மாநாடு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

 

DMK organizes a grand convention in thiruchy


திருச்சி திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் பாராட்டு விழா மாநாடு திருச்சியில் வரும் 31-ஆம் தேதி நடைபெறுகிறது. மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு 31ஆம் தேதி திருச்சியில் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டுக்கு திமுக தலைவர் தலைமை வகிக்கிறார். திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் கே.என் நேரு மேற்பார்வையில் திருச்சி மாவட்ட திமுக நிர்வாகிகள் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடம் பேசுகையில், மாநில முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் மட்டுமின்றி கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் என 30 ஆயிரம் பேர் மாநாட்டில் பங்கேற்பது என எதிர்பார்க்கிறோம்.

அதற்கேற்ப பிரம்மாண்டமாக பந்தல் தலைவர்களுக்கான மேடை அமைக்கப்பட உள்ளது. இதைபோல் பங்கேற்கும் அனைவருக்கும் சைவம் மற்றும் அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதற்காக தனித்தனி உணவுக் கூடங்கள், அலங்கார வரவேற்பு வளைவுகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன இதற்கான பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உள்ளாட்சி பிரதிநிதிகளை பாராட்டுவதுடன் இனிவரும் நாட்களில் அவர்கள் எவ்வாறு மக்கள் பணியாற்ற வேண்டும் அவரவர் பகுதியில் கட்சியை வளர்க்க என்னென்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை இந்த மாநாட்டில் வழங்கப்படும் என்கிறார்கள்.

இதற்கு இடையில் கே.என்.நேருவுக்கு திமுகவில் முக்கிய உயர் பதவி ஒன்று காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு அடுத்தடுத்து வரபோகிறது என்றும், அதற்கான நன்றிக்காக தான் இந்த பாராட்டும் விழா ஏற்பாடு என்கிறார்கள்.

 


 

சார்ந்த செய்திகள்