தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. இந்நிலையில், திட்டமிட்டே தி.மு.க வாக்காளர்களை அரசு அதிகாரிகள் நீக்குகின்றனர் என திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 தொகுதிகளில் (கரூர், அரவாக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை) மொத்தம் 1,032 பூத்கள் உள்ளது. இதில், ஒவ்வொரு பூத்திலும் சுமார் 100 முதல் 200 வரையிலான தி.மு.க வாக்காளர்களை அதிமுகவினர் அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து பட்டியலில் இருந்து நீக்குவதாக, கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், அரவர்க்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இப்பிரச்சனை தொடர்பாக சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது வழக்கும் தொடரப்படும் என்று தெரிவித்துள்ளார்.