திமுக எம்எல்ஏ கார் மீது மோதிய லாரி
கோவை: சிங்கநல்லூர் திமுக எம்.எல்.ஏ கார்த்தியின் கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக விபத்தில் காயம் ஏதுமின்றி கார்த்தி உயிர் தப்பினார்.
இன்று தனது காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். கோவை - திருச்சி சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டது.