திருச்சியில் இன்று நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு வந்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் திருச்சியில் மிக முக்கியமான தொழில் அதிபரும் திராவிடர் கழகத்தின் சொத்துபாதுகாப்பு குழுவின் தலைவராக இருந்த விகேஎன் என்பவரால் அன்பில் தர்மலிங்கத்திற்கு சிலை திறந்து இருந்தனர்.

தற்போது அந்த சிலை சிதிலமடைந்து இருந்தால் தற்போது அவருடைய பேரனும் திருவரம்பூர் எம்.எல்.ஏவும்மான அன்பில் மகேஷ் தன் தாத்தாவின் நூற்றாண்டை முன்னிட்டு அந்த சிலையை புதிதாக நிறுவுவதற்கு அனுமதி கேட்டு தற்போது கிடைத்துள்ளதால் இன்று அன்பிலார் சிலையை ஸ்டாலின் திறக்கிறார்.
இன்று மாலை திருச்சி மாவட்ட திமுக சார்பில் கே.என்.நேரு மற்றும் ராமஜெயம் ஆகியோரின் கடுமையான உழைப்பில் உருவான கலைஞர் அறிவாலயத்தை 2010ஆண்டு திமுக தலைவர் கலைஞர் திறந்து வைத்தார். தற்போது அதே வாளாகத்தில் திருச்சி மாநகர திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தின் முன்புறம் அறிஞர் அண்ணாவின் சிலையும், கலைஞர் சிலையையும் உருவாக்கியுள்ளார். நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு முன்னதாக இந்த சிலைகளை திறந்து வைக்கிறார்.
இந்த சிலைதிறப்பு மற்றும் நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட திமுக சார்பில் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்று வருகிறது.