






Published on 06/12/2020 | Edited on 06/12/2020
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கச்சனத்தத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 1,000 பேருக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை மு.க,ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்வின் போது ஸ்டாலினுடன் தி.மு.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.