Skip to main content

திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு கூடுதல் அதிகாரம்!

Published on 10/11/2019 | Edited on 10/11/2019

திமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று (10/11/2019) காலை 10.00 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர். திமுக நிர்வாகிகள் நீடிப்பர் என்று தீர்மானம். அடுத்த ஆண்டுக்குள் திமுகவின் உட்கட்சி தேர்தலை நடத்தி முடிப்பது என்று பொதுக்குழுவில் தீர்மானம். 

DMK GENERAL MEETING MK STALIN SPEECH


மேலும் திருநங்கைகளை திமுகவில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு கட்சியில் உள்ள சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவும், இணையதளம் மூலம் திமுக உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம். வெளிநாடுவாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம். வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைத்து தீர்மானம். அடுத்த ஆண்டுக்குள் திமுகவின் அமைப்பு தேர்தல் நடத்தி முடிப்பது என தீர்மானம், திமுக மருத்துவர் அணி என்பது மருத்துவ அணி என மாற்றி பொதுக்குழுவில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. 

DMK GENERAL MEETING MK STALIN SPEECH

 

அதை தொடர்ந்து திமுகவில் நிர்வாகிகளை சேர்க்கவும், நீக்கவும், பொதுச்செயலாளரின் அதிகாரம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தரப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனிடம் இருந்த இந்த அதிகாரம் தற்போது ஸ்டாலினும் வழங்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் நீக்கம் அல்லது சேர்ப்பு குறித்த அறிக்கைகளில் இனி மு.க.ஸ்டாலின் கையெழுத்திடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 





 

சார்ந்த செய்திகள்