
திருவண்ணாமலை மாவட்டம் சாரோன் கரையான் செட்டி தெருவில் வசித்து வருபவர் சங்கர். இவர் திமுகவின் நகர இளைஞர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். நேற்று இரவு தனது வீட்டுக்கு வெளியே நிறுத்தி இருந்த காரின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதனைக் கண்ட சங்கரின் தந்தை கூச்சலிட்டதும் குண்டு வீசியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த குண்டு வீச்சில் காரின் கதவு பகுதி சேதமடைந்தது. இச்சம்பவம் பற்றி உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, "சங்கர் ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் தரும் கந்துவட்டி பிரமுகராக உள்ளார். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இவரின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் யாராவது செய்தார்களா? ஏதாவது முன்விரோதம் உள்ளதா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்" என்கிறார்கள்.
ஏ.டி.எம் கொள்ளை, பெட்ரோல் குண்டு வீச்சு என திருவண்ணாமலை நகரம் பரபரப்பில் உள்ளது.