Skip to main content

திமுக காங்கிரஸ் கூட்டணி; காங்கிரசுக்கு 10 தொகுதி

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

 

Stalin

 

நாடாளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

 

நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் எம்.பி கனிமொழி பேச்சுவார்ததை நடத்திய நிலையில் இன்று திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் 

 

இன்று மாலை சென்னையில் கிண்டி ஓட்டலில் முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளான முகில் வாஸ்னிக், கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், சஞ்சய்தத், வசந்தகுமார், விஜயதாரணி, கே.ஆர்.ராமசாமி, வேணுகோபால் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.  

 

 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அளித்த பட்டியலில் கடலூர் தொகுதி இல்லை என தகவல் வெளியான நிலையில் காங்கிரசுக்கு கடலூர் தொகுதி கேட்கப்படாததால் கே.எஸ்.அழகிரி போட்டியில்லை எனவும் தகவல் வெளியாகியது. 

 

stalin

 

அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்னும் சற்று நேரத்தில் அண்ணா அறிவாலயத்திலிருந்து திமுக காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீட்டு தொடர்பான விவரங்கள் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில்

 

அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முக்கிய திமுக நிர்வாகிகளான துரைமுருகன்,ஆர்.எஸ்.பாரதி உட்பட பல நிர்வாகிகள் வருகை தந்தனர். அதேபோல் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளும் அண்ணா அறிவாலயம் வருகை தந்தனர்.

 

அதனையடுத்து  காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின்,

நடைபெரும் நாடாளுமன்ற பொதுதேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் தமிழகத்தில் 9 மற்றும் புதுச்சேரியில் 1 என மொத்தம் காங்கிரசுக்கு 10 தொகுதிகளை ஒதுக்குவதாக முடிவெடுக்கப்பட்டு தற்போது கையெழுத்தாகியுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது பிறக்கட்சிகளுடன் பேசி முடிவு செய்யோம். ஏற்கனவே தோழமையுடன் உள்ள கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறினார்.   

 

 

 

 

சார்ந்த செய்திகள்