தூத்துக்குடியில் ஸ்டொ்லைட்டுக்கு எதிராக போராடியவா்கள் மீது போலிசார் திட்டமிட்டு நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 போ் உயிரிழந்த சம்பவம் நாடு முமுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை கண்டித்து தமிழகம் முமுவதும் அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இதில் குமாரி மாவட்டத்தில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் சார்பில் நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தி.மு.க எம்.எல்.ஏ க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் உட்பட தி.மு.க காங்கிரசை சோ்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனா்.
அதே போல் கல்குளம் தாலுகா அலுவலகம் எதிரே நடந்த ஆா்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ க்கள் தி.மு.க மனோதங்கராஜ், காங்கிரஸ் ராஜேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனா்.
மா.கம்யூ. முன்னாள் மாநில செயலாளா் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் வேப்பமூடு சந்திப்பில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி பெல்லார்மின் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
இதே போல் கோவளத்தில் ஆயிரக்கணக்கான மீனவா்கள் ஓன்று சோ்ந்து ஊா்வலமாக சென்று கன்னியாகுமாரி காந்தி மண்டபம் முன் உட்கார்ந்து மெழுகு திரி ஏந்தி மௌனமாக எதிர்ப்பை காட்டினார்கள். மேலும் பல்வேறு மீனவ கிராமங்களில் கருப்பு கொடி கட்டி தமிழக அரசு மற்றும் போலிசுக்கு எதிராக எதிர்ப்பை காட்டினார்கள்.
இதனால் குமாரி மாவட்டத்தில் பல இடங்களில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.