
திருப்பூர் செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலுச்சாமி - சுலோச்சனா தம்பதியினர். இவர்களுக்கு விஷ்ணு, கிருஷ்தீஸ்வரன் என்று இரு மகன்கள் உள்ளனர். இதில் 15 வயதாகும் கிருத்தீஸ்வரன் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே மாணவன் கிருத்தீஸ்வரனுக்கு தலைமுடி உதிர்வு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் மாணவர் கிருத்தீஸ்வரன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் தற்கொலைக்கு முன்பு மாணவன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில், எனக்குத் தொடர்ந்து முடிவு கொட்டும் பிரச்சனை இருந்து வருகிறது. அதிகளவில் முடி உதிர்வதால் என்னை பார்ப்பதற்கு அசிங்கமாக தெரிகிறது. அதனால் வாழ பிடிக்காமல் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.